பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள்

சற்றுமுன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வினை, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இன்று தொடங்கும் இந்தத் தேர்வு, ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. வழக்கம் போல், வினாத் தாளை படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன.

தேர்வுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 2400 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார விநியோகம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.