நடிகைக்காக ஸ்டாலின் பொங்கிவிட்டார்! சீதாமாதாவை கொச்சைப் படுத்தியதற்கு இந்துக்கள் பொங்குவது எப்போது?!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin radharaviimage - 2026

நடிகை நயன்தாராவை ‘கூப்பிடத் தோன்றுகிறவர்’ என்று திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது அக்கட்சி.

திரையுலகத்தினர் ஓட்டுகள் வேண்டும் என்பதற்காக, திரையுலகத்தினரை சமாதானப் படுத்த நடிகைக்காக பொங்கி, தேர்தல் முடியும் வரை தற்காலிகமாக ராதாரவியை கட்சியை நீக்கி விட்டார் அக் கட்சித் தலைவர் ஸ்டாலின்! ஆனால், கூடவே இந்து மத தெய்வங்களை இகழும் திமுக.,வின் போக்குக்கு ஏற்ப, சீதாமாதாவை இழிவுபடுத்திப் பேசிய ராதாரவியின் பேச்சுக்கு இந்துக்கள் பொங்குவது எப்போது என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

இது தொடர்பாக விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் டிவிட்டரில் டேக் செய்து குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ராதாரவியின் பேச்சு சர்ச்சையானதால், திமுக.,வின் பிரசார பீரங்கி அவர் என்பதால், இது வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணத்தில், திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக தி.மு.க. விலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று அறிவித்தது.

radharavi - 2026

இந்நிலையில், ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது, கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ள அறிவிப்பு திமுக நாளிதழான ‘முரசொலி’யில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கண்ணியக் குறைவாக கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார்.

“பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால்… நடிகையை கொச்சைப் படுத்திப் பேசியதற்காக மு.க.ஸ்டாலின் தனது கட்சியைச் சேர்ந்தவரை தற்காலிக நீக்கம் செய்திருக்கிறார். அதே நேரம் சம்பந்தமே இல்லாமல் சீதாமாதாவை கொச்சைப் படுத்திப் பேசியதற்காக இந்துக்களும் இந்து உணர்வாளர்களும் எதனை யாரை எப்படி எப்போது நீக்கம் செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.