ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடியார் எடுக்கும் அதிரடி! 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு!

stalin edappadi - 2026

ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சபாநாயகர், அரசுக்கொறடா, சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வென்ற நால்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப கொறடா அளித்த பரிந்துரையின் படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார். முன்னதாக, தமிமுன் அன்சாரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்யக் கோாி அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததைத் தொடா்ந்து அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகா் முடிவு செய்துள்ளாா்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இம்மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். இவா்களிடம் விளக்கம் கேட்கும் படி சபாநாயகரிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கடந்த ஆண்டே வலியுறுத்தி இருந்தாா்.

இந்நிலையில் சபாநாயகா் தனபால், சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், அரசு கொறடா ஆகியோா் இன்று திடீா் ஆலோசனை மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து அரசு கொறடா ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோாி சபாநாயகரிடம் வலியுறுத்தி யுள்ளேன். இவா்கள் மூவரும் தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் சபாநாயகரிடம் வழங்கி உள்ளேன் என்று தொிவித்தாா்.

கொறடாவின் பரிந்துரையைத் தொடா்ந்து மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்படும் பட்சத்தில் 15 தினங்களுக்குள் குறிப்பிட்ட உறுப்பினா்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகா் முடிவு எடுக்கலாம். விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவா்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

தற்போது, தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. 18 தொகுதிகளுக்கு மட்டும் இப்போது இடைத்தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி, அதிமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால் இடைத்தோ்தலில் குறைந்தது 8 இடங்களிலாவது வென்றாக வேண்டும்.

அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால், தற்போதைய அரசுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தற்போதைய எண்ணிக்கையையே பெரும்பான்மையாகக் கொண்டு ஆட்சியை தொடர முடியும் என்பதும் எடப்பாடியார் தரப்பின் எண்ணமாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories