சோழர்களை ஏன் டார்கெட் செய்கிறார்கள்..?!

உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

pa ranjith rahul gandhi - 2026

நில அபகரிப்பு, அதிக வரி என்று கொடுங்கோல் ஆட்சி செய்தான் ராஜராஜசோழன்- சினிமாவின் வரலாற்று அறிஞர்கள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்கிற தொன்மத்தின் பின் இருக்கும் பொருள் பொதிந்த அறிவு செழுமைகளை… நிர்வாக கூர்மையை…. அறிவியல் ஆற்றலை… பற்றி கடுகளவு கூட அறியாமல், தெரிந்து கொள்ளவும் முற்படாமல்…அனைத்திற்கும் இன்றைய முட்டாள்தனமான அரசியல் சாயத்தை பூசிப் பார்க்கும் போக்கு…பரந்து விரிந்த சோழர்களின் பெருமைகளையும்.. கேவலப்படுத்துகிறது.

எசாலம் செப்பேடுகள்… மிகத்தெளிவாக.. பறை உட்பட்ட 5 வகை வாத்தியங்களை வாசித்த மக்களுக்கு சோழர்கள் அளித்த பெரும் நில தானம் குறித்து குறிப்பிடுகிறது.

ராஜராஜ சோழன் / ராஜேந்திர சோழன் காலத்தில் நாடு செல்வச்செழிப்புடன், பெரும் விளைச்சலுடன் சுபிக்ஷமாக இருந்தது. வரி சீராக வசூலிக்கப் பட்டதே தவிர … கந்துவட்டிக்காரன் போல அல்ல.

அந்த நாளைய தமிழக மன்னர்களின் அரசுகள் குடிமராமத்தை சீராக செய்தன. நீரின்றி அமையாது உலகு என்பதை புரிந்து கொண்டு தொலைநோக்குடன் அறிவார்ந்த நிர்வாகம் செய்தார்கள்.

கடந்த 50 வருடங்களாக .. தமிழக நீர்நிலைகளை எல்லாம் அபகரிக்கும் போதும் , ஆக்கிரமிக்கும் போதும் அவற்றை தடுக்காமல்.. பேரறிவுடன் வாழ்க கோஷம் போட்டுக் கொண்டிருந்த அதே சினிமா துறை…இன்று …அதே பேரறிவுடன் ..வரலாற்றை படிக்காமல்..சோழர்களின் பெருமைகளை கேவலப்படுகிறது.

தமிழக திரைத்துறை பேரறிஞர்களால் நிரம்பி வழிகிறது !!.

சோழர்கள் .. இந்து மன்னர்களாக ..தாங்கள் வெற்றி பெற்று விரிவுபடுத்திய தங்கள் சாம்ராஜ்யம் முழுவதும் இந்து ஆன்மீகத்தை கொண்டு சேர்த்தார்கள்.

தமிழக அரசியல் வழக்கப் படி…சோழர்களை டார்கெட் செய்வதற்கு இதைவிட இன்னொரு காரணம் தேவையா என்ன !

  • பானு கோம்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.