ஆசிரியர் வெட்டிக் கொலை! பள்ளியிலே நடந்த துணிகரம் !

204

kolai1 - 2026தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

அரசுப் பள்ளி வளாகத்தின் முன்பு ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதூர் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மைய சிறப்பு பள்ளியில் ஆசிரியராக வடிவேல் முருகன் பணிபுரிந்து வந்தார். பள்ளி முன்பு நடைபெற்ற படுகொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்ப பகை காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளதா? முன் விரோதமா? வேறு ஏதேனும் காரணமா என விசாரணையின் முடிவில் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.