கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும்!

ஆன்மிகச் செய்திகள் லைஃப் ஸ்டைல்
naga-panchami
naga-panchami

இன்று கருட பஞ்சமி. இதனை நாக பஞ்சமி என்ற பெயரிலும் கடைபிடிப்பதுண்டு.

இந்த பண்டிகையையொட்டி பக்தி சிரத்தையுடன் சர்ப்ப சூக்தம் பாராயணம் செய்வது வழக்கம். இதன் மூலம் அனைத்து சர்ப்ப தோஷங்களையும் நீக்கி விஷ பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

இந்த நாளில் அவ்வாறு செய்பவர்களுக்கு சந்தான ப்ராப்தி, காரியசித்தி, வெற்றி கிடைப்பதோடு காலசர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள் குறையும். நோய்கள் குணமாகும்.

நாக பஞ்சமியைப் பற்றி சுருக்கமாக அறியலாம். இதன் முக்கியத்துவம் ஸ்காந்த புராணத்தில் பரமேஸ்வரனால் விளக்கப்பட்டுள்ளது.

ஸ்ராவண சுத்த பஞ்சமி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. ஆதிசேஷனின் சேவையில் மகிழ்ச்சி அடைந்த ஶ்ரீமகாவிஷ்ணு ஏதேனும் வரம் கேட்கும்படி கூறவே, தான் உத்பவித்த சிராவண சுக்ல பஞ்சமியன்று மானுடர்கள் சர்ப்ப பூஜை செய்ய வேண்டும் என்று கோரினார். ஸ்ரீ மகாவிஷ்ணு ஆதிசேஷனின் விருப்பத்தை அறிந்து சிராவண சுக்ல பஞ்சமி நாளில் மக்கள் நாகங்களை வணங்குவார்கள் என்று ஆசியளித்தார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

எனவே அப்போதிருந்து இந்த நாளில் பாம்புக் கடவுள்களை வணங்குவது போன்ற பூஜைகள் செய்யப்படுகின்றன. அதனால் பக்தர்களின் குறைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறுகிறன்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.