ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா சற்றுமுன்
miltry

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, மறைவான பகுதியில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் சேர்ந்து ரன்பிர்கார் பகுதியில் இன்று அதிகாலையில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே சில மணி நேரங்கள் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.