srirangam day7 - 2026

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தின் பகல் பத்து ஏழாம் நாள் அலங்காரம்!

ஆன்மிகச் செய்திகள் Featured திருச்சி லைஃப் ஸ்டைல்
srirangam day7 - 2026

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவ ஏழாம் திருநாளான, டிச.29 இன்று நம்பெருமாள் சர்வாலங்கார ரூபியாய் அர்ஜுன மண்டபத்தில் காலையில் எழுந்தருளினார். 

இன்று நம்பெருமாள்  கல் இழைத்த நேர் கிரீடம், மகர கர்ண பத்ரம், மகரி,  பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல்,மிக அரிதான இந்திரக்கல் பதக்கம், அடுக்கு பதக்கங்கள்,  ரத்தின அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு கச்சத்தின் மேல் தர்பார் அங்கி அணிந்து,  நெல்லிக்காய் பொட்டு மாலை, 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக – சந்திரகலை பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி,  சேவை சாதித்தார். தொடர்ந்து, இரவு புறப்பாடு கண்டருளினார்.

படம்: Sriranga Arangam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.