December 6, 2025, 1:20 AM
26 C
Chennai

பிணியின் அஞ்சுலை அகற்றும் ஆரஞ்சு!

orange
orange

மனித உடலின் மிக முக்கிய நோய் தீர்க்கும் சக்தியான விட்டமின் சி அதிகமாக இருப்பது ஆரஞ்சில்தான். ஓர் ஆரஞ்சில் விட்டமின் சி யின் அளவு 19 மி கிராம். சிட்ரஸ் பழங்கள் வரிசையில் ஆரஞ்சு பெறுவது முதலிடம்.

உடலின் செல்களைத் தாக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது ஆரஞ்சு ஆரோக்கியத்துக்கு அவசியமான உடல் செல்களை ஆரஞ்சு கண் இமைகளைப் போலக் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எத்தகைய நோயிலிருந்தும் நம்மை மீள வைக்கும் அற்புத சக்தி ஆரஞ்சுக்கு உண்டு.

இதில் அதிகளவு கால்சியம் இருப்பதால் உடலில் உள்ள எலும்புகள் பற்களைப் பலப்படுத்துகிறது. பி கரோட்டின் உள்ளதால் நம் உடலில் உள்ள செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது.

மெக்னீசியம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தொடர்ந்து ஆரஞ்சை உண்ண ரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகரிக்கிறது. போலிக் அமிலம் இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. பொட்டாசியம் இருப்பதால் உடலில் உள்ள தாது உப்புக்களை சமப்படுத்துகிறது.

ஆரஞ்சுப் பழத்தினால் தீரும் நோய்கள்

வாத நோய்களான மூட்டுவலி இடுப்பு வலி கழுத்து வலி நீங்கும்.

ஆஸ்துமா பசியின்மை இருமல் சளி மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும். இதய நோய் இளைப்பு நோய் முகப்பரு கரும்புள்ளி ஆகியவை காணாமல் போகும்.
தூக்கமின்மையை விரட்டும். நரம்புகளைப் பலப்படுத்துவதோடு உடல் சோர்வையும் போக்கும். உடல் எடையைக் குறைக்கும். குழந்தைகள் வயது முதிர்ந்தோருக்கு உடல் பலத்தை அதிகரிக்கும்.

ஆரஞ்சுப் பழச்சாறுடன் தேன் கலந்து அருந்த உடலுக்கு சக்தியைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

ஆரஞ்சுச் சாறுடன் உப்பு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அருந்த இருமல் சளி ஆஸ்துமா குறையும்.

இப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்பான பொட்டாசியம் போன்றவை உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

இவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதோடு சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

இப்பழத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பானது உடலில் காயம் ஏற்படும்போது வைரஸ், பாகடீரியா, பூஞ்சை தொற்றுதலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.

கொடை ஆரஞ்சு செரிமானம் மற்றும் நரம்பு மண்டலங்களை தொற்றுகிருமிகளிடமிருந்து பாதுகாத்து பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றை தடுக்கிறது.

மேலும் இப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்கிறது.

இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தினை பளபளக்கச் செய்வதோடு சருமத்தினை வளவளபாக்கி மேம்படுத்துகிறது.

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தினை புறஊதாக்கதிர்கள், சூரிய ஒளி, வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடில்களின் சேயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

புற்றுநோயைத் தடுக்க
கொடை ஆரஞ்சில் உள்ள கரோடீனாய்டுகள் மற்றும் விட்டமின் ஏ கல்லீரல் புற்றுநோயைத் தடைசெய்கின்றன.

மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்தவர்கள் இப்பழச்சாறினை அடிக்கடி உண்ணும்போது அதில் உள்ள கிரிப்டோ சாந்தின் கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதோடு கல்லீரல் புற்றுநோயையும் தடைசெய்கிறது.

இப்பழத்தில் காணப்படும் லிமோனின் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளது.

இப்பழத்தின் தோலானது தோல் புற்றுநோயினை தடை செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோயினைத் தடுக்கலாம்.

நல்ல செரிமானத்திற்கு
கொடை ஆரஞ்சானது கரையும், கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.

மேலும் இந்த நார்ச்சத்துகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் துணை புரிகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் நீங்குகின்றன.

எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க
கொடை ஆரஞ்சு சைன்ஸ்பைன் உடலில் கொழுப்பு உற்பத்தியைத் தடுக்கும் பொருளினை உற்பத்தி செய்கிறது. இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினைக் கூட்டுகிறது.

மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேருவதை இப்பழம் தடைசெய்கிறது.

மேலும் இப்பழத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான கெமிசெல்லுலோஸ் மற்றும் கரையாத நார்ச்சத்தான பெக்டின் போன்றவை குடலில் கொழுப்பு உறிஞ்சுதலைத் தடைசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு
கொடை ஆரஞ்சானது கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.

ஃபோலேட்டுக்களின் குறைபாட்டால் குழந்தைகள் எடைகுறைந்து பிறந்தல், பிறப்பு குறைபாடு ஆகியவற்றுடன் பிறக்க நேரிடும்.

எனவே கொடை ஆரஞ்சினை உண்டு கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் நலத்தினையும், குழந்தையின் நலத்தினையும் பாதுகாக்கலாம்.

கொடை ஆரஞ்சினை வாங்கிப் பயன்படுத்தும் முறை
கொடை ஆரஞ்சினை வாங்கும்போது புதிதாகவும், கனமானதாகவும், பளபளப்பாகவும், மேற்தோலில் காயங்கள் இல்லாமல் இருப்பவற்றை வாங்க வேண்டும்.

மேல்தோல் சுருங்கிய, வெட்டுக்காயங்கள் உள்ள லேசானவற்றை தவிர்க்கவும். இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

குளிர்பதனப்பெட்டியில் இருவாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். கொடை ஆரஞ்சினை உண்ணும்போது மேல்தோலினை உரித்துவிட்டு உள்ளிருக்கும் சுளைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு மெல்லியதோலுடன் உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு மலட்டுதன்மை நீங்கவும், ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் வழிவகை செய்கிறது.

அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்

கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் ஆரஞ்சு அதிகம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது

நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட். வெள்ளை அணுக்கள் உற்பத்தியையும் பெருக்கும்.

தொடர்ந்து ஆரஞ்சுப் பழச்சாறு பருகும்போது, சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும். கடினமான உப்புக்களால் உருவாக்கப்படும் இந்தக் கற்களை ஆரஞ்சின் அமிலப் பண்பு கரைத்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories