சப்பாத்திக்கு சுவையான சைட் டிஷ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kasmiri-rajma-1
kasmiri-rajma-1

காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி

தேவையான பொருட்கள்

ராஜ்மா 200 கிராம்
வெங்காயம். 200 கிராம்
தக்காளி. -100 கிராம்
பட்டை லவங்கம்
ஏலம் பிரிஞ்சி இலை -தலா ஒரு துண்டு
வெண்ணை. – நாலு ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள். -ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் -3
முந்திரி. – 5
சீரகம். -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள். -அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள். – ஒரு ஸ்பூன்
தேவைக்குஉப்பு
சிறிதுகஸ்தூரி மேத்தி

செய்முறை
ராஜ்மாவை 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் போட்டு 4 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து சீரகம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி இரண்டையும் தனித்தனியே வேக வைத்து பேஸ்ட்டாக அரைத்து கடாயில் அடுத்தடுத்து போட்டு நன்கு வதக்கவும்

அவை நன்கு வதங்கி வந்ததும் காஷ்மீரி மிளகாய்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் கலவை நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது வேகவைத்த ராஜ்மா அதனுடன் சேர்த்து கலந்து விடவும்.

பச்சை மிளகாய் முந்திரி வெங்காயம் சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். கலவை ஒன்று சேர்ந்து நன்கு வெந்து கிரேவி பதம் வரும் பொழுது காஸ்தூரி மேதி உள்ளங்கையில் வைத்து தேய்த்து அதன் மேல் தூவி இறக்கி பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.