முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த போலீஸ்! இரண்டாவது கணவர் விபரீத முடிவு!

Published:

sankitha-1
sankitha-1

தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து வேறு திருமணம் செய்து கொண்ட பெண் போலீசால் இரண்டாவது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (24). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த யுவராஜுக்கும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதா என்பவருக்கும் காதல் உருவாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகு தான் சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவருக்கு 8-வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் 2-மாதத்துக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதா கணவன், மனைவி இருவரையும் பிரித்து வைத்தார். இதனால் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்துள்ளார் யுவராஜ். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த யுவராஜிடம் தனக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு செல்லவிருப்பதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இதனால் மண் அழுத்தத்திற்கு ஆளான யுவராஜ் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே துத்தநாகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் இறப்பதற்கு முன்பு தன்னுடைய இறப்பிற்கு காரணம் மனைவி சங்கீதா, சங்கீதாவின் முன்னாள் கணவர் புருஷோத்தமன், பெண் போலீஸ் சந்தியா மற்றும் ஜீவா என கடிதம் எழுதி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மேலும் பெண் போலீஸ் சங்கீதாவை கைது செய்ய கோரி யுவராஜின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அளித்த உத்தரவாதத்தின் பேரில் உறவினர்கள் களைந்து சென்றனர்.

Related articles

Recent articles

spot_img