ஜாலியா சாப்பிட ஜவ்வரிசி உப்புமா!

Published:

Sago upuma
Sago upuma

ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 200 கிராம்,
வறுத்த வேர்க்கடலை – 100 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், தோல் உரித்த பச்சைப் பட்டாணி (இரண்டும் சேர்த்து) – ஒரு சிறிய கிண்ணம்,
பொடியாக நறுக்கிய பச்சை, சிவப்பு, மஞ்சள், குடமிளகாய் (மூன்றும் சேர்ந்து) – ஒரு கிண்ணம்,
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை நனையும் வரை தண்ணீர்விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும். இப்போது ஜவ்வரிசி ஊறி உதிரி உதிரியாக மிருதுவாக இருக்கும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், குடமிளகாய், வெங்காயம், இஞ்சி விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலையைப் போட்டுக் கிளறவும். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

குறிப்பு: பேபிகார்ன் நறுக்கிப் போட்டும் இந்த உப்புமாவைத் தயாரிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

Related articles

Recent articles

spot_img