Cantaloupe powder
Cantaloupe powder

பாகற்காய் பொடி
தேவையான பொருட்கள்

1/2 கிலோ பாகற்காய்
10 மிளகாய் வற்றல்
50 கிராம் மல்லி
சிறிது விரலி மஞ்சள்
தேவைக்கேற்ப உப்பு
எண்ணெய்

செய்முறை

பாகற்காயை கழுவிக் விதைகளை நீக்கிக் கொண்டு நைசாக நறுக்கிக் கொள்ளவேண்டும். சிறிது தண்ணீர் விட்டு உப்புடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும்.

பின் இதனை வெயிலில் உலர்த்த வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் நன்கு காய்ந்து பாகற்காய் வற்றல் தயாராக இருக்கும்.

பிறகு மிளகாய் வற்றல், மல்லி, விரலி மஞ்சள் ஆகியவற்றை வறுத்து எடுக்க வேண்டும்.

பின் உலர்ந்த பாகற்காய்களை எண்ணெயில் முறுகுமாறு, கருகிவிடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும்.

அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

சாதத்தோடு சாப்பிடலாம். பொரியல் போலவும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பொரியலாக சாப்பிட விரும்புபவர்கள் நைசாக அரைக்காமல் சற்று ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளலாம்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending