லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோபி புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Gobi pulav - 2026

கோபி புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
காலிப்ளவர் – 1 (பெரிதாக உதிர்த்து சுத்தபடுத்தி வைக்கவும்)
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு – 5 பல்
நெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ – தலா 2
பிரிஞ்சி இலை – 2
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, புதினா சேர்த்து வதக்கவும். பின்பு காலிப்ளவர் சேர்த்து லேசாக வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும் போது உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.

கொதி நன்கு வரும் போது, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும். தயிர் பச்சடி, டல்மா, கிராவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.