health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தலைவலி, பொடுகு, முகப்பரு, புழுவெட்டு..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

தீராத தலைவலி

தும்பைப் பூவை எண்ணெயிட்டுக் காய்ச்சித் தலையில் தேய்த்துவர தீராத தலைவலியும் குணமாகும்.

தலைவலி

சுக்கை தாய்ப்பாலில் உரைத்து அதை நெற்றியில் பற்றுப்போட்டு நெருப்பு அனலின் முன் சிறிதுநேரம் காட்ட எப்பேர்ப்பட்ட தலைவலியும் தீர்ந்துவிடும். ஒருதுண்டு சுக்கை எடுத்து அம்மியில் உரைத்து அக்குழம்பை தலைவலியுள்ள பக்கத்தில் பற்றுப்போட்டால் தலைவலி நின்றுவிடும்.

ஒருதலைப்பூண்டை அம்மியில் வைத்து அரைத்து அதை நெற்றிப்பொறியில் தடவினால் சில நிமிடங்களில் தலைவலி நின்றுவிடும்.

இஞ்சியை அரைத்து தலைவலி உண்டாகும் இடத்தில் பற்றாகப் போட்டுவிட தலைவலி சிறிதுநேரத்திற்குள் குணமாகிவிடும்.

தலைவலியில் புழுவெட்டு

சிறிய வெங்காயத்தை இரண்டாக வெட்டி புழுவெட்டு உள்ள இடங்களில் நன்றாக அழுத்தித்தேய்த்துவர புழுவெட்டு அகலும்

தலை பொடுகு

ஆவார இலையை தேவையான அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைக்க வேண்டும். பின்பு அதை தலையில் தடவவேண்டும். ஒரு மணிநேரம் நன்றாக ஊறிய பின்னர் குளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் தலைப்பொடுகு அகலும்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

முகப்பரு

வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து சிறிதளவு சர்க்கரையைக் கூட்டி தொடர்ந்து பருகிவர மூன்றே மாதங்களில் முகப்பருக்கள் அகன்றுவிடும். முகப்பருக்களின் மீது புனுகைத் தடவிவர முகப்பருக்கள் குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு, துளசிச்சாறு, தேன், சந்தனம் இவைகளைச்சம அளவில் கலந்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவிவர முகப்பருக்கள் குணமாகும்.

வாதாங்கொட்டையை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து வெண்ணெ யில் குழைத்துதடவிவர முகப்பருக்கள் அமுங்கி குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.