பாகம் 3 அநிதி பெரிது நீலப்புரவியில் வந்து திருவாங்கூர் அரசகுலப் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞன் யார்? என்று இந்தக் கதையைப் படிக்கும் நேயர்களுக்கு தோண்றியிருக்கும். மீண்டும் அவசரப்படாதீர்கள் எஜமானர்களே. சொல்கிறேன். கேளுங்கள். வடமேற்கு இந்தியாவின் ராஜபுத்திர வம்சத்தினரில் சூரியவன்ஷி குலமரபினர் வீரம், நாட்டுபற்று மிக்கவர்கள். அந்தமரபில் தோண்றிய மகாராணா பிரதாப்சிங் மேவாரை ஆட்சிசெய்து வந்தார். அவர் மகாராணா உதய்சிங்கின் மூத்த மகனாவார். உதயசிங்கிற்கு பிறகு, ஆட்சிக்கு வந்த மகாராணா பிரதாப்சிங், தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தார். அவர் ஆட்சி புரிந்த காலத்தில் இந்தியாவின் நட்சித்திரமாக மொகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சி புரிந்து வந்தார். மகாராணா பிரதாப்சிங் சிறுவராக இருந்த போது அவரது தந்தை உதய்சிங் சித்தூரில் ஆட்சி புரிந்தார். அக்பர், சித்தூர் கோட்டையைத் தனது படைவலிமையால் கைப்பற்றினார். இந்த யுத்தத்தில் இருபத்தேழாயிரம் நிராயுதபாணிகள் கொல்லப்பட்டார்கள். கற்பைக் காப்பாற்றி கொள்ள கோட்டையில் இருந்த பெண்கள், உடன்கட்டை ஏறித் தீக்குளித்து மரணமடைந்தார்கள். அதைக்கண்ட மகாராணா பிரதாப்சிங்குக்கு நெஞ்சம் கொதித்தது. மகாராஜா உதயசிங் அருகில் இருந்த குன்றுகளுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். தந்தையுடன் பிரதாப்பும் சென்றார். ஆரவல்லி மலையடிவாரத்தில் புதிய அரசை உதயசிங் அமைத்தார். உதயசிங்கிற்கு வயதும் ஆனது. அந்தகாலத்தில் இருந்த அரசியல் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, நாட்டையாள மகாராணா பிரதாப்சிங் தகுதியானவர் என்று நாட்டின் பெருமக்கள் கருதினார்கள். அவர்களின் விருப்பப்படி பிராதாப் ஆட்சிக்கு வந்தார். பிராதாப் மனதில் அக்பர் ஏற்படுத்திய காயத்தின் வலி, கொஞ்சமும் குறையாமல் இருந்தது. மொகலாயார்களுக்குப் பெண்களை திருமணம் செய்வித்துக் கொடுப்பதையும் அவர் விரும்பவில்லை. மகாராணா பிரதாப்சிங்கிற்கு பலவிததங்களிலும் உதவியவர் ஜாலாசிங் (). இந்த ஜாலாசிங்கிற்கு நெருங்கிய உறவினன்தான் நமது கதையின் கதாநாயகன் விக்கிரமன்சிங். ஜாலாசிங்கின் உத்தரவின்படி விக்கிரமன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த ராஜ்யங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அக்பரை எதிர்த்துப் போராட அவர்கள் உதவும் சூழ்நிலை இருக்கிறதா என்று பார்த்து வரவும் அனுப்பட்டிருந்தான். அவன் கொடுக்கும் விவரங்களை அறிந்து, அவசியப்பட்டால் தானும், மகாராஜாவும் மீண்டும் சென்று அவர்களின் ஆதரவை நாடலாம் என்று ஜாலாசிங் எண்ணியிருந்தார். ஜாலாசிங்கின் விருப்பப்படி தென்தமிழ்நாடு வரை வந்த விக்கிரமன் சோழநாடும், பாண்டியநாடும் இருந்த சீர்குலைந்த நிலையை அறிந்து கொண்டான். சேரநாட்டின் பலத்தையும் தெரிந்துகொண்டான். கொங்கனி கடற்கரை வழியாக வந்தவன், திரும்பும் பொழுதுதான் மீனாளைப் பார்த்தான். பெண்களைத் தூக்கிவருவதை மகாராணா பிரதாப்சிங்கும், ஜாலாசிங்கும் அனுமதிக்கமாட்டார்கள் என்று அவனுக்குக் கவலை இருக்கத்தான் செய்தது. தான் அவளை செல்ல அனுமதித்தும், அவள் திரும்பவில்லை என்று அவர்களிடம் சொன்னால் அவர்கள் கோபம் குறையலாம் என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. தான் தூக்கி வந்த பெண் பேசிய மொழி முதலில் விக்கிரமனுக்கு புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக செய்கைகளின் மூலம் அவள் சொல்வதைப் புரிந்து கொண்டான். தனது மீதிருக்கும் அன்பால்தான் அவள் தன்னுடன் வரச்சம்மதித்தாள் என்பது அவனுக்குப் புரிந்தது. மீனாளும், அவன் பேசிய மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டாள். பத்மநாதபுரத்திலிருந்து உதயப்பூருக்கு வர அவர்களுக்கு ஒரு திங்கள் பிடித்தது. அதற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டார்கள். அன்பிற்கு அடைக்கும்தாள் இல்லையல்லவா? ஜாலாசிங் இதை எப்படி ஏற்றுக்கொள்ளுவார் என்று விக்கிரமனுக்கு சந்தேகம் தீரவில்லை. அவரின் அனுமதியில்லாமல் மீனாளைத் திருமணம் செய்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை. உண்மையைச் சொல்லுவோம். திருவாங்கூரின் நிலையை மீனாள் சொல்லலாம்; ஜாலாசிங் சொல்வதைக் கேட்போம் என்ற முடிவில் இருவரும் இருந்தார்கள். இருவரும் உதயப்பூர் வந்ததும் விக்கிரமன் விசாரித்தான். ஜாலாசிங், எகலிஞ்ஜி என்று அழைக்கப்படும் சிவன் ஆலயத்துக்குக்குப் போயிருப்பதாகச் செய்தி கிடைத்தது. மனஅமைதிக்காக ஜாலாசிங் அங்கு போவது சகஜம். மீனாளை அங்கு அழைத்துச் சென்றால், தெய்வத்தின் முன்னால் ஜாலாசிங் மறுப்பது கடினம் என்று விக்கிரமன் முடிவெடுத்து, மீனாளை எகலிஞ்சி ஆலயத்துக்கு அழைத்துச்சென்றான். நான்கு முகம் கொண்ட சிவன் அழகான கறுப்புகல்லில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஜாலாசிங் சிவனை வழிபட்டு முடிக்கும் வரை காத்திருந்த விக்கிரமன், அவர் சிவனை சுற்றி வரும் பொழுது மீனாளுடன் அவர் முன் நின்றான், தனது உறவினன், தன்னால் முழுவதும் நம்பட்டவன் ஒரு தென்னிந்தியபெண்ணுடன் நிற்பதை ஜாலாசிங்கால் தாங்கமுடியவில்லை. ராஜபுத்திரப்பெண்களுக்கு ஏற்பட்டக் கொடுமைகளைக் கண்முன்னால் பார்த்தவருக்கு, விக்கிரமனும் அதே போலக் கொடுமைகளைச் செய்து ஒரு தென்னிந்தியப் பெண்ணைத் தூக்கி வந்திருப்பானோ என்ற எண்ணம் வந்ததும், கோபமும் வந்தது. அவரது கை தானாக இடையிலிருந்த வாளுக்குச் சென்றது. சிவனாலயம் என்று கூடப் பார்க்காமல் வாளை விக்கிரமன் மேல் செலுத்த ஓங்கினார். மீனாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தடுமாறி நின்றாள். அந்த ஒரு விநாடியில் விக்கிரமனின் உயிர் பிரிந்திருக்கும். மேவாரும் விக்கிரமனின் சேவையை இழந்திருக்கும். ஆனால் எல்லாம் உணர்ந்த சிவனின் எண்ணமும் வேறாக இருந்தது. ஜாலாசிங் வாளை ஓங்கிய சமயம் எங்கிருந்தோ வந்த வேற்று வாள் அவரின் வாளைத் தடுத்தது. அவ்விதம் தடுத்ததில் வந்த தீப்பொறியைப் பார்த்துக் கதிகலங்கிய மீனாள் ஜாலாசிங்கின் காலில் விழுந்தாள். தனது வாளைத் தடுக்கும் தைரியம் யாருக்கு இருக்கும் என்று ஜாலாசிங் கோபத்துடன் பார்த்தார். அவர் கண்கள் உடனே தாழ்ந்தன. வாளைக் கீழே போட்டுவிட்டுத் தலைவணங்கினார். ஆனாலும் அவர் தன் கருத்தை சொல்லத் தயங்கவில்லை. “மகாராஜா, இவன் செய்த செயலைப் பார்த்தீர்களா?” என்றார். “அப்படி என்ன செய்து விட்டான்?” “தென்னிந்தியாவிலிருந்து ஒரு பெண்ணைத் தூக்கிவந்திருக்கிறான். யாருக்கோ பெரிய அநிதி செய்திருக்கிறான்” “என்ன அநிதி?” “பெண்ணை தூக்கிவருவது, அவளைப் பெற்றவர்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் இல்லையா?” “துரோகம் தான். ஆனால் ஜாலாசிங், நீ சிந்திக்கும் திறனை இழந்து விட்டாய்” “என்ன மகாராஜா?” “இவளைக் கவனித்துப் பார்த்தாயா? அவள் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்தாயா?” “மகாராஜா” “நீ செய்ய இருந்த காரியத்தினால் நாம் விக்கிரமனை இழந்திருப்போம். நான் எப்பொழுதும் பெண்கள் விருப்பப்படாதக் காரியத்தை செய்யவேண்டம் என்று தானே சொல்லியிருக்கிறேன். பெண்களின் விருப்பமுடன் நடக்கும் காரியங்களை நான் மறுதளிப்பதில்லையே. இந்த மகளைப் பார். நீ விக்கிரமனை கொல்லப் போகிறாய் என்றதும் அவள் உன் கால்களில் விழுகிறாள். கண்களில் காதலும், பயமும், ஆசையும் தெரிகிறது. எதையும் தீர விசாரித்து அல்லவா நீ முடிவு எடுத்திருக்க வேண்டும்” என்றார். “மகாராஜா மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார் ஜாலாசிங். “விக்கிரமா, என்ன நடந்தது? சொல்” என்றார் மகாராஜா “நான் எனது குரு ஆணையிட்டபடி தமிழ்நாடு சென்றேன். அங்கு வெகுகாலமாக செல்வமுடனும், செழிப்புடனும் இருந்த பாண்டியநாடும், சோழநாடும் களையிழந்து இருக்கிறது. சேரநாடு துண்டாடப்பட்டிருக்கிறது. பத்மநாதபுரத்தில்தான் இவளைப் பார்த்தேன். அவளின் பிரியப்படிதான் அழைத்து வந்திருக்கிறேன். நான் கேட்டும் அவள் போக மறுத்தாள். மகாராஜா தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி செய்கிறேன்” என்றான். “பெண்ணே எழுந்திரு. நீ உனது விருப்பப்படிதான் விக்கிரமுடன் வந்தாயா?” என்றார் மகாராணா பிரதாப்சிங். மீனாள் அதற்குள் இந்தியில் ஓரளவுக்குப் பேசத் தெரிந்து கொண்டிருந்தாள். “என் விருப்பம் இல்லாமல் யாரும் என்னை அழைத்து வரமுடியாது” என்றாள். “ஜாலாசிங் கேட்டாயா? சரியான சத்திரியர் குலத்துப் பெண்ணாக இருக்கவேண்டும்” என்றவர், “விக்கிரமனைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டார். இத்தனை சீக்கிரம் மகாராணா முடிவெடுப்பார் என்று விக்கிரமன் எண்ணவில்லை. மீனாளின் தலை தாழ்ந்தது. விக்கிரமனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. “ஜாலாசிங், நான் ஒருநிமிடம் தாமதித்திருந்தால், உனது அலட்சியத்தால் இந்த மேவார் நல்ல தளபதியை இழந்திருக்கும்” என்றவர், “என்றைக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாய்?” என்றார் விக்கிரமனிடம். “இன்றே” என்றான் விக்கிரமன் மெல்ல. மகாராஜா சிரித்தபடி, “உனக்கு அவசரம் அதிகம்தான் என்றவர், இன்றுநாள் நன்றாக இருக்கிறதா?” என்றார். “இன்று மகாசிவராத்திரி. இன்று இரவே திருமணம் செய்து விடுவோம்” என்றார் ஜாலாசிங் உற்சாகத்துடன். மீனாளின் முகம் ஆகாயத்தாமரை போல மலர்ந்தது. தொடரும்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
தலையங்கம்
சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
தலையங்கம்
சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
மதுரை
மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

