ஓம் குங்குமக்காரி !

கவிதைகள்
samayapuram
samayapuram

ஓம் குங்குமக்காரி
– பத்மன் –

ஓம் ஓம் ஓம் குங்குமக்காரி ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் சூக்குமக்காரி
ஓம் ஓம் ஓம் குங்குமக்காரி ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் சூக்குமக்காரி

கண்டம் கருத்தவனை நெஞ்சில் இணைத்தவளை
அண்டம் படைத்தவளை விஞ்சும் திறத்தவளை
என்றும் இருப்பவளை வஞ்சம் கெடுப்பவளை
நன்றே தருபவளை தஞ்சம் புகுமனமே.

அரசாளும் மீனாட்சி வரமளிக்கும் காமாட்சி
கருகாக்கும் கர்ப்பரக்ஷா அறம்காக்கும் தர்மாம்பா
மலைமகளாம் உமையம்மை மழைதருவாள் மாரியம்மை
தவமிருக்கும் பகவதியின் தாளிணை நினைமனமே.

கோலனைக் கொன்றவளை மகிஷனை மாய்த்தவளை
வேலனைப் பெற்றவளை மாயவன் சோதரியை
கணபதியை ஈன்றவளை குணநிதியின் இணையவளை
நற்கதியைத் தருபவளை நாடிப் பணிமனமே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.