மகிழ்ச்சியின் உச்சம்

இலக்கியம் கவிதைகள் லைஃப் ஸ்டைல்

IMG 20170818 WA0026 - 2026

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம்,

ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம்.

வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ!

பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!!

காரணம் தெரியாத என்அழுகையை கண்டு ஆனந்த துடி துடித்தாயே!

நான் பிறந்த தருணத்தில் என் வண்ணத்தை அறியாமல் கண்ணத்தை தொட்டு மகிழ்ந்தாயே!!

அப்படியே உன் சாயல் என ஊர்பேச அந்த நொடி   ஆனந்தம் உன் தலைக்கேற!

கண்ணாடி முன் உந்தன் உடல் மட்டும் கண் இரண்டில் என் முகம் நினைவூட்ட!!

மழலை பேச்சில் எனக்கு வாய் குளர!

நான் பேசும் மொழியின் திகைப்பில் நீ மலர!!

நீ காட்டிய அன்பை கணக்கெடுப்பேன்
எக்காலம் முழுவதும் கடனடைப்பேன்

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம்

ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம்

தூவிய விதைகள் எல்லாம் முளைப்பதில்லை,

முளைத்து மரமாயினும்  விதையை பிரிவதில்லை.

லட்சம் விதையை நீ தூவி  கச்சிதமாய்  என்னை களமாடி!

கடைக்கோடி போயும்  உன்னை மறவேனே!

கடல் தாண்டி உன்னை அனைப்பேனே !!

காலம் மெல்ல கடந்து கரையேற

உன் சொல் ஊட்டம் போதும் என்னை கரை சேர்க்க

இத்தகைய அன்பிற்குறியவனே!

எத்தனை ஆஸ்கார் உனக்கு அளிப்பேன்.

படைப்பு:

      நா.நேரலை வருண்

               (தஞ்சாவூர்)

வயது:22

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.