இன்று முழுசூரிய கிரகணம் (21.8.2017 திங்கள் )

Published:

solar eclipse - 2026

முழுசூரிய கிரகணம் 21.8.2017 திங்கள்

சூரியன் நிலவு பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும் காலத்தில் நிகழும்
முழுமையான சூரிய கிரகணம் இது. இக்கிரகண காலத்தில் சூரியன் முழுமையாக நிலவால்
மறைக்கப்படும் அற்புதமான நிகழ்வாகும்

இன்று பூமியில் நிகழும் முழுசூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9:17 மணி
முதல் துவங்கி இரவு 2:34 மணி வரை நிகழும்.
கிரகணம் அதிகபட்சமாக ஒரு இடத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே முழுமையாக மறைவதை
காண இயலும்!

இந்தியாவில் தெரியாத இந்த கிரகணம், வட அமெரிக்க கண்டத்தில் வாழும் மக்கள் இதன்
முழுபரிமாணத்தையும் காணலாம்.
அமெரிக்க மக்களுக்கு மிகவும் அரிதான ஒன்றாகும். இதை “தீ கிரேட் அமெரிக்கன்
எக்லிப்ஸ்” என்றும் அழைக்கலாம்
தென் அமெரிக்கா, வடதுருவ அமெரிக்க கண்டம், கனடா நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக
இது தோன்றும்.

முழு சூரிய கிரகணம் ஐக்கிய அமெரிக்க நாட்டில் மேற்கு கடற்கரை நகரான லிங்கன்
சிட்டி யில் துவங்கி கிழக்கு கடற்கரை “மெக்கன் வில்லி” ஊரில் முடிவடையும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்த சூரிய கிரகணம் வானியல் பௌதீக விஞ்ஞானிகளுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு
விருந்தாகும். இது போன்ற ஒரு கிரகணம் பல அறிவியல் ஆய்வுகளுக்கு குறிப்பாக
சூரியனின் செயல்பாடுகள், சூரியனின் ஒளிஅலைவரிசையில் உள்ள புதிய தனிமங்கள்,
செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உகந்தகாலமாகும்.

பொதுமக்களும் இதை தவறாமல் கண்டு களிக்கும் வகையில் மிகவும் பாதுகாப்பான
வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் உட்பட பல கல்விநிறுவனங்கள் இன்று பலவேறு
“கிரகணம் காணுதல்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

என்னற்ற தன்னார்வ வானியல் கழகங்களும், நாஸா அமைப்பும் பள்ளிகளுக்கு இலவசமாக
கிரகண கண்ணாடிகளை தந்தும், தொலை நோக்கியில் மாணவர்கள் காணும் வகையிலும்
உதவிசெய்துள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள் இந்த
நிகழ்வை ஆய்வுசெய்ய அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நமது சென்னை
வானியல் ஆர்வலர்களும் இந்த நிகழ்வை பதிவு செய்ய ஈடுபட்டுள்ளனர்

கிரகணம் அதிகபட்சமாக ஒரு இடத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே முழுமையாக மறைவதை
காண முடியும் என்பதால் கிரகணம் நிகழும் முழுபாதையையும் அமெரிக்க வானவியல் துறை
“நாஸா” தொடர் கண்காணிப்பிற்காக சிறப்பு விமானங்களை இயக்கி அதில் இருந்தபடியே
ஆய்வுசெய்ய பல குழுக்களை நியமித்துள்ளது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

தாம்பரம் வானவியல் கழகம்
பாலு சரவண சர்மா

Related articles

Recent articles

spot_img