இதயத்தின் ஒளியாய் நீ!

heartsun கதிரவனின் வெளிச்சக் கீற்று கண்களில் விழுந்து காலையில் எனை எழுப்பும்! கவனத்தில் நீ எழுந்து காதலில் எனை எழுப்புவாய்! முதல் காதலாய் என்னில் முகிழ்த்தவள் நீ! உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை..! உன் முகம் நோக்கும் முன்னே… பளீரென்று வெளிக் கிளம்பும் பற்பசை விளம்பரப் புன்னகை உனது! செயற்கைக்கோள் தொலைக்காட்சி வரவால் செயற்கையாய் மாறிப்போன கிராமங்களில் அற்றை நாள் நான் கண்ட அழகு உனது! கிராமங்களும் தொலைத்துவிட்ட அபூர்வமான அதிசயம் நீ! ரம்யா… அழகின் பெயராய்ச் சூட்டி அழகு பார்த்தேன் நான்! படிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், படிய வாரிப் பின்னலிட்டு இடுப்பு வரை நீளும் கூந்தல்… பணிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், நிலம் நோக்கி நடந்து செல்லும் அமைதியான அழகுப் பார்வை… பொக்கை வாய்ச் சிரிப்பில் குழந்தைக்கும் கிழவிக்கும் கவர்ச்சி கூடும்! ஆனால், குமரி நீயோ… கன்னக் குழிச் சிரிப்பில் கவனத்தைக் கட்டிவிட்டாய்! கன்னங்கள் இரண்டிலும் பாலைவன மணல்மேடாய்க் குவியும் சதை! உப்பிய கன்னத்தில் மேட்டைக் கரைத்து காற்று வரைந்த வரிகள் போலே குழியும் கதை! கன்னக் குழிகளுக்குப் போட்டியாய் கண்களும் களத்தில் இறங்கும் – இமைகளின் ஓரத்தில் இரண்டொரு கீற்றாய் வெளிப்பட்டு! உன் கன்னக் குழி கண்ட நொடி என் நெஞ்சத்தில் குழி விழுந்து நேரலையாய் அசைபோடும்! கண்கள் கொண்ட காட்சியால் கருத்தும் ஈர்க்கப் பட்டிருந்தது! ஆனால்… மனம் உன்னிடம் முட்டிமோதியதில் மயக்கம் எல்லாம் மடிந்து போனது! உண்மைதான்…. உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை! உன் செயல்… காதலில் விழுந்தவள் என்பதை உணர்த்தியிருந்தது! காதற் போர்வையில் காயப் படுதலையே கண்டவன் நான்! என் மொழி உனக்குக் கசப்பாய்த்தான் இருந்தது! நானும் அறிந்திருந்தேன்..! ஆனாலும்… மருத்துவர் புகட்டும் மருந்தைப் போல்… இலக்கியக் காதல்களை எடுத்து இயம்பினேன்! ஒரு நாள்… “காதல் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?” நன்றாய்த்தான் கேட்டாய்..! காதல் என்றால் இதுவென அறியாது காலம் கடத்தி வந்தவன் நான்! சித்தாந்தங்களில் சிக்கித் தவித்தவன்… சிக்கல் என்றே சிக்கித் தவிர்த்தவன்! காதல் என்றால் வாழ்க்கைச் சிக்கல்; பெண் என்றால் மனத்தில் சங்கடம் பெண்ணிடம் மனத்தை செலுத்தாதே… எல்லாம்… அறிவுரைகள்! அறிவுரைகள்! ஆனால் பெண்ணே… உன்னைக் கண்ட பின்னர் தான் காதலின் சுவை அறிந்தேன் நான்! நீ… பெண்மையின் அண்மையை எனக்குக் காட்டி உனக்குள் என்னைக் கரைத்தவள்! உன்னையே நினைக்க வைத்து என்னை நானே மறக்க வைத்தவள்! காதலுக்கு எதிரியாய் இருந்த என்னை நண்பனாய் மாற்றி உன்னையே காதலிக்க வைத்தவள்! விழிகளில் ஏற்றி வைத்த விளக்கெனவே என் காதல்..! அடிக்கும் ஊடல் காற்றால் அவ்வப்போது அசைகிறது தீபம்! உயிர்க் காற்று சிதறடித்தாலும் என்னில் அது அணையாது! ஆனால் பெண்ணே… உன் வாழ்க்கைப் பாதையின் நோக்கத்தில் சில.. இப்போதுதான் புரிபடுகிறது! போகட்டும்…! நம் காதலும் நட்பும்… புன்னகையில் போட்டு வைத்த எழிற் கோலம்! மவுனப் போர்களாய் மழை மேகம் பொழிந்தாலும் அழியாத கோலம்! ஒரு ஜென்மம் போகட்டும்… மறு ஜென்மம் ஆகட்டும்… தொடரும் பந்தம்! துவங்கும் சொந்தம்! ஆம் பெண்ணே … ஆம்! நான்… காதலனாய்த் தோற்றுவிட்டேன்! காதலில்தான் வென்றுவிட்டேன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories