நோக்கும் திசையெலாம் நீயே~!

இலக்கியம் கவிதைகள்

eyes-pencil-drawing-copy காதலுக்குக் கண் இல்லையாம்! சொல்பவர்கள் ரசனையின் எச்சம் அறியாதவர்கள்… ஆனால்… பார் பெண்ணே … நான் ரசனையின் உச்சம் கண்டவன்! உன் ரசிகனாய்… உன்னை என் கண்களால் உயிர்ப்புடன் விழுங்கியவனாய்! என் நாளின் அதிக பொழுதுகள்… உன் நினைவுகளுடன்! நின்றால்… என் பார்வையில் நீ வாசம் செய்கிறாய்! நடந்தால் என் பாதையில் நீயே உடன் வருகிறாய்! படுத்தாலும் என் போர்வையில் உன் வாசம் நாசி துளைக்கிறது! உன் மீது காதலுற்றவனாய் நான்… எனக்குத் தெரியும் உன் மீதான என் கனிவுப் பார்வையின் வீச்சு! என்னை வைத்தே உன்னைப் பார்த்துப் பார்த்து…! ஏனோ ஓர் ஆசை என்னுள்! உன்னை வைத்து உலகைப் பார்க்க! உன் அழகுக் கண்களை உள்ளத்தில் இருத்தினேன்.. உன் கண்களால் என் உலகைக் கண்டேன்! என்ன அற்புதம் பெண்ணே! உலகின் மூலை முடுக்கெல்லாம்.. திரும்பிய பக்கத்தில் எல்லாம்.. நான் காணும் ஒவ்வொன்றிலும் உன் கண்களே தெரிகிறதே! ஓ.. நான்… உன் கண்களின் வழியே காதலில் விழுந்தவன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.