பிரதமர் சென்னை வந்தடைந்தார்! அமோக வரவேற்பு!

உள்ளூர் செய்திகள் கல்வி சென்னை
modi 9 - 2026

சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதுதவிர “இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019′ என்ற நிகழ்ச்சியும் தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு இன்று காலை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்.ி

modi 1 3 - 2026

மேலும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியினர் உட்பட அனைவரும் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

2-வது முறை பதவியேற்ற பிறகு பிரதமர் முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.