சிசிடிவி கேமராவில் சிக்கி விடுவோமோ? பயத்தில் கொள்ளையர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Published:

srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 134 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் சிசிடிவியில் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் எலெக்ட்ரிக் கடையின் மேற்கூரையை பிரித்து கம்ப்யூட்டர் , சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான மணி எலக்ட்ரிகல் கடையில் மேற் கூரையை துளையிட்டு எல்.இ.டி டிவி , கம்ப்யூட்டர் , சிசிடிவி கேமரா, கார்ட் டிஸ்க், பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் 134 பவுண் நகை கொள்ளையடிக்கப் பட்ட சம்பவத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கிருஷ்ணன் கோயில் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

srivilliputhur1 - 2026

இந்த நிலையில் கொள்ளை போன வீட்டிற்கு அருகே உள்ள எலக்ட்ரீர் கடையில் இருந்த சிசிடிவி யில் கொள்ளையர்கள் புகைப்படம் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் அதே கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

தடயத்தை அழிக்க கடையில் இருந்த சிசிடிவி கேமரா, கம்யூட்டனர், டிவி, பணம் உள்ளிட்டவற்றை அதே கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
thiruttu - 2026

மேலும் ஒரு டிவிஎஸ் ஷோரூம் கடையின் மேற்கூரையும் கொள்ளையர்கள் துளையியிட்டுள்ளனர். ஆனால் அங்கு புதிதாக டிவிஎஸ் பைக் இருந்துள்ளது. அந்த பைக்கை திறக்க முடியாததால் கொள்ளையர்கள் அந்தக் கடையில் இருந்து எந்தக் பொருளையும் எடுத்து செல்ல முடியவில்லை.

அப்படியே விற்று சென்று விட்டனர். தொடர்ந்து கடந்த 10 நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூரில் திருட்டுச் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உடனடியாக காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமென பொதுமக்களின் எதிர்பார்க்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img