உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா? ரூ.50,000 வரை கடன் பெறலாம்!

Published:

cellur raju

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, “முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரூ 50,000 வரை யார் வேண்டுமாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வறு நலவாரிய தொழிலாளர்களுக்கு 2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது. அத்துடன் விவசாயம், சிறு கடைகள், மற்றும் கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளளது.

இதனையடுத்து இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனில் முழுயைமாக ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டிய நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த சூழலில் ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் படி கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img