நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

nellai dy commisioner - 2026

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று பொறுப்பேற்றார்.

மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

IMG 20170627 WA0012 - 2026இவர் 2002ம் ஆண்டு குரூப்1 தேர்வு எழுதி தேர்வாகி கடலூரில் டிஎஸ்.பியாக பணி யாற்றினார். பின்னர் திருச்சியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றினார்.

2013ல் பதவி உயர்வு பெற்று மதுரையில் குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் பணியாற்றினார். தற்போது நெல்லையில் பொறுப்பேற்றுள்ளார்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநகர் போலீஸ் துணை கமிஷனருக்கு காவல்துறை அதிகாாிகள் மற்றும் அலுவலா்கள், நெல்லை மாவட்ட
செய்தியாளா்கள்  வாழ்த்து தொிவித்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.