இலவச வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!

உள்ளூர் செய்திகள் நெல்லை
P 20170718 122818 - 2026

செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை கிராமத்தை சேர்ந்த
200க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை
கிராமத்தில் குத்தகை இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் சுமார் 100 பெண்கள்
உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ,அரசு திட்டங்களின் கீழ் இலவச
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கோட்டை தாலுகா
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் தாலுகா அலுவலக
அதிகாரிகள் நடந்திய பேச்சுவார்த்தையில் வரும் மூன்று நாட்களுக்குள் இது
சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக
கூறினர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.