இணைப்புக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம்: யாருக்கு என்ன பதவி?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

edappadi dinakaran panneerselvam - 2026

அதிமுக., வின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று மதியம் முதல்வர் எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்த படுகிறது.

முதலில் பகல் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இரு தரப்பும் கூட்டாக ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் பகல் 2 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்

3 மணிக்கு மேல் ராஜ்பவனுக்கு வந்து,  பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.

அதன் பிறகு அனைவரும் கோட்டைக்கு வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்புக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றமாக,

வழிகாட்டுக்குழுத்தலைவர். ஓ.பி.எஸ்.
இ.தலைவர் எடப்பாடி
து.தலைவர்கள். கே.பி.முனுசாமி , வைத்தியலிங்கம்.
துணை முதல்வர் மற்றும் நிதி ஓ.பி.எஸ். ,
கல்வி அமைச்சர் மாஃபா ,
செங்கோட்டையன் பொதுப்பணித்துறை என முடிவு  செய்யப்பட்டுள்ளது

இதனிடையே, தினகரன் தரப்பும் கோபத்தில் உள்ளது. இரு அணிகளின் இந்த இணைப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் தங்களது ஆதரவாளர்களை வைத்து  அரசியல் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒரு முறை ஓபிஎஸ்ஸை வெளியேற வைத்து, எடப்பாடி மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டிய சசிகலா தரப்பு, இப்போது வேறு வகையில் அதே பாணியை கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே மேலும் ஒரு பிளவு சாத்தியமாகும்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.