கலெக்டர் அலுவலகத்திலே தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
collector-office-madhurai
collector-office-madhurai

மதுரையில் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வண்டியூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.

நேற்று முன்தினம்பகல் நேரத்தில் வேலை செய்து வந்த வேல்முருகன், இரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். அங்கையே தங்கிய அவரை போலீசாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் கலெக்டர் அலுவலக வளாக மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் வேல்முருகனை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.