இரவில் பைக்கில் வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்! வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
yuvaraj-1
yuvaraj-1

மதுரை மாவட்டம், பொதும்பு அருகே வழிப்பறிக் கும்பல் கத்தி யால் குத்தியதில் இளைஞர் உயிரிழந்தார்.

அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிராஜ். இவரது மகன் யுவராஜ் (30). இவர் பரவையில் மசாலா நிறுவனத்தில் ஓட்டுநர், விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சுமார் 1 மணியளவில் சிக்கந்தர் சாவடி- பொதும்பு ரோட்டில் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருவர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. அவர் தர மறுத்ததால் அவரைக் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீஸார் யுவராஜ் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதல் கட்ட விசாரணையில் மொபைல் போனைப் பறிக்க முயன்றபோது இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக் கின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.