விலை வீழ்ச்சி: புடலையை குப்பையில் வீசிய விவசாயிகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை
bettercard - 2026

தேனியில் விவசாயிகள் புடலங்காயின் விலை வீழ்ச்சியால் அதிருப்தியடைந்து அவற்றை குப்பையில் வீசினர்.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலம் காலமாக விவசாயிகள் வாழை, திராட்சை, தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்யும் விதமாக கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தேனியில் நிலத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருக்கும் விவசாயிகள் கத்திரிக்காய், புடலங்காய் ,வெண்டங்காய் உட்பட சில காய்கறிகளை சாகுபடி செய்தனர். இதனையடுத்து தற்போது புடலங்காயினை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது புடலங்காயின் விலை 1 கிலோவிற்கு 4 முதல் 6 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் தேனியில் அதிருப்தியடைந்த விவசாயிகள் புடலங்காயை குப்பையில் வீசியுள்ளனர்.

இப்படி விலைக் குறைந்ததை மக்களுக்கும் கொடுக்காமல், ஏழைகளுக்கோ, ஆதரவற்றோர் விடுதிகளுக்கோ முதியோர் இல்லங்களுக்கோ, கோசாலைக்கோ, கொடுக்காமல் குப்பையில் கொட்டி சென்றது மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.