செல்போன் ஜார்ஜ் ஏற்ற போன மாணவன்! ஷாக் அடித்து உயிரிழந்த பரிதாபம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை
karuppana kumar
karuppana kumar

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.