கோவையில் முறையான ஆவணமின்றி தங்கியிருந்த சூடான் நாட்டு இளைஞர் முகம்மது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன்
Mohammad Al Mumun Khalid - 2026

முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த சூடான் நாட்டு மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெட்ரோல் வாங்க பணம் தந்து உதவுமாறு அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞரின் தோற்றத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.

இதனையடுத்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது அல் முமுன் காலித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் 6 மாத கால விசாவுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈச்சனாரி பகுதியில் தங்கியிருந்து அந்த இளைஞர் தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.

இதனையடுத்து தனது நண்பர்களை பார்த்து விட்டு இந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது.

இதனால் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இந்த இளைஞர் பெட்ரோல் வாங்க பணம் கேட்ட போது பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இவர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கியிருந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.