பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு: மேலும் ஒரு புலி மரித்துப் போனது!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் நெல்லை

vanabarathi mohanram - 2026

மரணத்தை முன்னே அறிந்தவர் தான்….
இயற்கை காதலன்…
வன பாரதி மோகன் ராம் …

பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு.
மேலும் ஒரு புலியை இன்று இழந்தோம்.

எனது வனம் இங்கே தான் மரித்துப் போவேன்
என்பது தான் இவரது கடைசி வார்த்தைகளாம்….

பொதிகை மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பசுமையை நேசித்தவரும், தாமிரபரணியில் புதைந்து கிடந்த குப்பைகளையும், துணிகளை அப்புறப்படுத்தியும், தொடர்ந்து அரிய பணிகைளை ஆற்றிவந்த நண்பர் மோகன்ராம் மறைந்த வேதனையான செய்தி வந்துள்ளது.

நாய் கடித்துவிட்டது. ரேபீஸ் நோயால் சீக்கிரம் நான் இறந்துவிடுவேனய்யா என்று கடந்த இரண்டு மாதங்களாக எனது வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு அழுததெல்லாம் எனது மனதிற்குள் நினைவலைகளாக வந்தது.

உண்மையான சுற்றுச் சூழல் ஆர்வலர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்து பொதிகை மலை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வரை சுற்றுச்சூழல் பணிகளை ஆற்றிய ஆர்வலரின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பு மட்டுமல்ல, பெரும் வேதனையும் தருகிறது.

அவருடைய புதல்வன் பாரதியுடன் என்னை சந்திக்க வருவதுண்டு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?”

#தாமிரபரணி #சுற்றுச்_சூழல்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.