கடைமடைப் பகுதியில் தண்ணீர் விடணும்னா போலீஸை வெச்சிக்கிட்டுதான் விடமுடியும்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சென்னை

os manian 21 1503322566 - 2026

திருப்பூர்: திருப்பூரை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக் கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்டத்திற்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த கைத்தறி அமைசர் ஓ.எஸ் மணியன், சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் , கால்நடைத்துரை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைசர் ஓ.எஸ் மணியன், திருப்பூரில் உள்ள நொய்யலில் சாய நீர் கலப்பதற்கு வாய்ப்பே இல்லை, 100 சதவிதம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் எனவும் காவிரி டெல்டா பாசனத்தில் கடைமடைக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்பது அறியாமையில் உள்ளோர் கூறுவது,

அனைத்து கடைமடை பகுதிக்கும் பாசனத்துக்கு திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் சென்றடைந்துள்ளது. கொள்ளிடத்தில் இருந்து அதிக பட்சமாக 30ஆயிரம் கன அடி நீர்தான் பாசனத்துக்கு திறக்க முடியும், பாசனப்பகுதிகளில் முன்பகுதியில் உள்ள விவசாயிகள் தண்ணீருக்காக மடையை திறந்து விடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போவதில்லை

அப்படி தண்ணீர்விட வேண்டுமானால் போலீசை நிறுத்தி வைத்துதான் தண்ணீரை திறக்க வேண்டியிருக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருப்பூரில் பேட்டி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.