விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 24 விதிமுறைகள்?! கரூர் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்து முன்னணி மனு!

Published:

sddefault 2 - 2026

கரூர்: மதசார்பற்ற அரசு! மத வழிபாட்டில் தலையிடுவதா? விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகளா? என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட இந்து முன்னணியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் (பொ) & மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் இந்து முன்னணி திருச்சி கோட்டத்தலைவர் வி.சி.கனகராஜ் தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 87 மனுக்களை தயாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

விநாயகர் சதூர்த்தி வரும் செப்டம்பர் 13 ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், அந்த விழா கொண்டாடுவதற்கு 24 விதிமுறைகளை அரசு விதித்துள்ளதாகவும், மதசார்பற்ற அரசு மத வழிபாட்டில் தலையிடுவதா ? என்று குற்றம் சாட்டி, மற்ற மதத்தினர் வழிபாட்டு முறையில் தலையிடாத அரசு,  இந்து மத வழிபாட்டில் மட்டும் தலையிட்டு இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதாகக் கூறி, கரூர் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img