பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்து!

Published:

krishna kuchela - 2026

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துச் செய்தியில்,  உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.

“பலன் தரும் செயல்களில் வெற்றியை விரும்பும் இவ்வுலக மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர். இவ்வுலகில் இத்தகு செயல்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பது உண்மையே. என்னை பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; செயல்களின் பலன்களை நான் விரும்புவதும் இல்லை. என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.” – ஸ்ரீமத் பகவத் கீதை வாழ்வியல் முறையின் தத்துவத்தை சொல்லும் கீதை என்னும் அற்புத சாரத்தை உலகிற்கு அளித்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த இந்த புனிதமான நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு மகிழ்ச்சியாக வாழவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திடவும் மனமார பிரார்த்திக்கிறேன்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

தர்மத்தை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்ற துணையாக நின்று அறவழியில் அவருடன் பயணிக்க நாமும் உறுதி கொள்வோம்.

அனைவருக்கும் என் மனமார்ந்த கிருஷ்ணா ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img