அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

balachandran - 2026

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது…

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

குறிப்பாக காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை நாகை திருவாரூர் தஞ்சை அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும்

மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லை !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.