மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது!

Published:

madurai banned lottory - 2026

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.  ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 19 ஆயிரம் எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.

மதுரை மாவட்டம் பறவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் வந்தது/ தனிப்படை அமைத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தினார்கள்.

இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் பரவையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஒரு கும்பல் விற்பனை செய்வதாக தகவல் வர விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் பரவையில் ஒரு கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கணேசன் பாண்டியன் என்ற இருவரையும் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி சேதுராமன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இவர்களை கைது செய்த ஸ்டீபன் ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

கைது செய்யப்பட்ட கணேசன் பாண்டி என்பவர்களிடம் 19000 எண்ணிக்கையிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளி சேதுராமனை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img