விமர்சையாக நடைபெற்ற சுவாமி சகஜானந்தர் குருபூஜை

Published:

mavenkatesan sahajanandar - 2026

ஜன.27 ஞாயிறு அன்று, ஸ்வாமி சகஜானந்தர் குருபூஜை கொண்டாடப் பட்டது.

சுவாமி சகஜானந்தர் பிறந்த நாளை இனி குரு பூஜை விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டதன்படி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுரைப்படி, தடா.பெரியசாமி தலைமையில் எஸ்சி அணியின் மாநில துணை தலைவர் விநாயக மூர்த்தி முன்னிலையில் “ஸ்வாமி சகஜானந்தர் குரு பூஜை” வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த குருபூஜை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 129 பெண்கள் பொங்கல் வைத்து, ஸ்ரீ நந்தனார் மடத்திற்கு ஊர்வலமாக சென்று ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ நந்தனார், ஸ்வாமி சகஜானந்தர் ஆகியோர்களுக்கு பூஜைகள் செய்து பெண்களால் பொங்கல் படைக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன், இந்து ஜாக்ரண் மஞ்ச் பொறுப்பாளர் சரவணன் மற்றும் பாஜக.,சார்பில் ம.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இனிவரும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 27ம் தேதி “ஸ்வாமி சகஜானந்தர் குரு பூஜை” வெகுவிமர்சையாக நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img