தேர்தல் பணி முடிந்து திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

inspector suicide - 2026

திண்டிவனம் : திண்டிவனத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பெண் காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் ஜெய்ஹிந்த் தேவி. தேர்தல் பணிக்காக திருச்சிக்குச் சென்று அங்கு பணிகள் முடிந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த காவேரிப் பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் திடீரென அவரது கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் தாங்காமல் தவித்த ஜெய்ஹிந்த் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை செய்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.