செல்போன் பறிப்பு இளைஞருக்கு தா்மஅடி..!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை தமிழகம்

bike chain snath - 2026

தனியே சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனா்.

சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சவிதா (வயது 19). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்

அப்போது மோடடார் சைக்கிளில் வந்த இருவா் சவீதாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரை தாக்கினா். இதில் நிலைகுலைந்து போன சவீதா ரோட்டில் விழுந்துள்ளார். அவரது கைப்பையும் சாலையில் விழுந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவன் சவீதாவின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தான்..

உடனடியாக சுதாரித்துக் கொண்ட சவிதா கூச்சலிட்டதை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டினர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த இளைஞன் தவறி கீழே விழுந்தான். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பொதுமக்களிடம் சிக்கிய அந்த இளைஞனை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரேம் குமார் (20) என்பதும், அவருடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பதும் தெரியவந்தது. போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.