துழாய் சாற்றிய மேனியனாய்… மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்!

ஆன்மிகச் செய்திகள் கோவை
maruthur karamadai anjaneyar
maruthur karamadai anjaneyar

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய   பழமை வாய்ந்த  அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இருந்தாலும், இத்தலம் வந்து சேவித்த பக்தர்களின் வாழ்வில், எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமானதால் இவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறார். 

இந்த திருத்தலத்தில்  ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இத்தலம் வந்து ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயரை வணங்கி செல்வார்கள்.

anjaneyar maruthur karamaai
anjaneyar maruthur karamaai

தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை  மருதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் திருத்துழாய் சாற்றிய  மேனியனாய் அபயம் அளித்தார். 

  • செய்தி: எஸ்.வி.பி.சரண், கோவை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.