மீண்டும் போஸ்டர் யுத்தம்! ஓபிஎஸ்.,தான் ‘அம்மா’வால் அடையாளம் கட்டப் பட்டவராம்!

Published:

admk-poster
admk-poster

திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதிகளில் தலைவா வா தலைமை ஏற்க வா என ஓபிஎஸ் ஆதரவாளர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஓபிஎஸ்சின் ஆதரவாளராக இருப்பவர் ராஜ்மோகன். இவர் ஒபிஎஸ் தலைமையில் அதிமுக கட்சியை தலைமையேற்க வலியுறுத்தி தலைவா வா தலைமை ஏற்க வா என போஸ்டர் ஒட்டி உள்ளார்.

இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் எடப்பாடி தலைமை ஏற்க மதுரையில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர்.

அதேபோல் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுக உட்கட்சி பூசல் பரவலாக வெளியே தெரிகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img