எலிக் கறியில் (விருந்து) மருந்து; விண்ணைத் தொட்ட விற்பனை…!

Published:

RAED - 2026

கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி முடிந்து உள்ளது. மேலும் அடுத்த கட்ட சாகுபடி செய்ய போதிய மழை இல்லாத காரணத்தினால் சம்பா சாகுபடி தொடங்கப்படாமல் வயல்வெளிகளை தரிசாக அப்படியே விட்டு உள்ளனர்.

இதனால் விவசாயம் செய்யப்படாமல் உள்ள வயல்களில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

இப்படி நடமாடி வரும் வயல் எலியை கறிவைத்து உண்டால் அதில் ஒருவித மருத்துவ குணம் இருப்பதாக கூறி பொதுமக்கள் எலிகளை கூட்டம், கூட்டமாக ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனா்.

இதனையடுத்து வயல்வெளி எலிகளை பிடித்து சிலர்
சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்

இதனை அந்த பகுதியை சுற்றி உள்ள ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்ததாக சம்பா சாகுபடி தொடங்கிய பின்பும் வயல்வெளிகளில் தொல்லை செய்யும் எலிகளை எலிப்பொறி வைத்து வேட்டையாட தயாராகி வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தற்போது கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதில் கம்பிகளில் 6 எலிகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வயல் எலிக்கறி கிடைப்பது அரிது என்பதால் பலர் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img