‘திகில்’ ரமானி..! ஆரம்ப புள்ளியும் முற்றுப்புள்ளியும்!

Published:

VK tahilramani madras hc2 - 2026

நாட்டிலேயே பணத்தால் எதையும் சாதிக்க முடியும் ‌என்பதில் முதலிடம் தமிழகம் மட்டுமே! 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் இதை சாதித்து காட்டியிருக்கின்றன

இந்தப் பெண்மணி வந்து ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ளது.

தமிழக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியான இவரை மேகாலயா நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றியபோதே… ஏதோ விவகாரம் இருப்பது வெளியில் அரசல்புரசலாக தெரிந்தது… காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று !

ஆனால் அவர் குறித்து நல்லவிதமாகவே சிலர் அப்போது தகவல் பரிமாறிக் கொண்டிருந்தனர் குறிப்பாக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஒரு வாய்ப்பாக தஹில்ரமணி விஷயத்தை சிலர் கையாண்டனர்

மிக நல்ல நீதிபதி குஜராத் வழக்கில் நல்ல தீர்ப்பினை வழங்கினார் அதனால் பழிவாங்கல் நடவடிக்கை என‌ஒரே குத்தாட்டம் போட்டார்

ஆனால் இன்று நடந்தது என்ன … ? தஹீல் ரமானி மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது …

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

சென்னை அருகே 4 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்டுகள் ஜுலை மாதம் வாங்கியிருக்கிறார் . அதில் இரண்டு கோடி ஹெச்டிஎப்சி வங்கியில் கடன்… மீதி 2 கோடி தனது தாயார் மற்றும் மகனிடம் கடன் என கூறி… ஆனால் பணம் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது…!

குறிப்பாக தான் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னர் ஊடகங்களிடம் சொல்லாமல் சொன்ன விஷயம் தனக்கு மும்பையில் இருப்பதைவிட சென்னையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதைத்தான்

இன்றைக்கு மாட்டிக்கொண்டு விட்டார்

இதே போல முன்பு ஜஸ்டிஸ் ராமசாமி ஜஸ்டிஸ் தினகரன் மாட்டி கொண்டனர்… ஆனால் காங்கிரஸ் அரசாக இருந்ததால் மேல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தனர்.

இன்று ரமானிக்காக போராடிய கட்டபஞ்சாயத்து மரத்தடி வக்கீல்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வார்கள்

முதன்முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கம்பி எண்ணப் போகும் நிகழ்வை ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறோம்

இப்போது தான் நீதித்துறையின் மீது #நம்பிக்கை வந்து இருக்கிறது

இவர் ராஜினாமா செய்த மறுநாள் அவரை ” சமாதான”ப்படுத்த ஓடிய அந்த அமைச்சருக்கும் சிக்கல் வரலாம்…

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

இவை எல்லாவற்றிற்கும் காரணம் #சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் #பெஞ்சை ரமானி #கலைத்தது தான்

காரணம் ” அதற்கான” விலை! நியாயம் நேர்மை கடைசியில் வென்றுவிட்டது

எத்தனையோ முதலைகளை எதிர்த்து சட்ட‌போராட்டம் நடத்தி இன்றைக்கு இவரை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் மேல் நடவடிக்கைக்கும் உட்படுத்திய அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

கோயில் சிலைதிருட்டு தான் ஆரம்ப புள்ளி. அதுவே ரமானிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் புள்ளி வைத்து தொடங்கிய, H ராஜா, பொன்மாணிக்கவேல், ரமேஷ், யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் உமா ஆனந்தன் இவர்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

  • குமார் கந்தசாமி

Related articles

Recent articles

spot_img