நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம்
3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019
நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)
பயறு-வெல்ல சுண்டல்
தேவையான பொருட்கள் :
பச்சை பயறு : 1/2 கிலோ (முழு பயறு – இரவு ஊறவைக்கவும்)
வெல்லம் : 1/2 கிலோ
தேங்காய் : 1 மூடி துருவியது
ஏலக்காய் : 4 பொடித்தது
நெய் : 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
– ஊறவைத்த பயறை 1 விசில் குக்கரில் வேக விடவும்
-பிறகு நீரை வடிய விடவும்
– வெல்லத்தை பொடி செய்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டவும்
– பிறகு அதை நல்ல பாகு (கெட்டி) வைக்கவும்
– பாகில் பயறை சேர்க்கவும்
– கொஞ்சம் தளரும், அடுப்பில் வைத்து கிளறவும்.
– இறுகியவுடன், தேங்காய், ஏலப்பொடி, நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.
– 1 சிட்டிகை உப்பு சேர்த்தல் தித்திப்பு சுவையை தூக்கிக் கொடுக்கும்
(சரியான படம் கிடைக்கவில்லை)



