வருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்
pal kova - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல பால்கோவா கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல கடைகளில் வரி மோசடி நடப்பதாக வந்த புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

palkova 1 - 2026

இதன் அடிப்படையில் பாரம்பரியமிக்க கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கணக்கில் காட்டப்படாத பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.