தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டபல்வேறு துறைகளுக்கு புதிதாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்றுநடத்தும். மேலும் கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும்.நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ரூ.75.02 கோடி செலவில் தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். அதேபோல் விபத்தில் நிரந்தமாக மாற்றுத்திறனாளியாக ஆவோருக்கு .2 லட்சம் வரை இழப்பீடு.
4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில் 21966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 15,850.54 கோடி ஒதுக்கீடு
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மூலதன மானியம் 50 லட்சமாக உயர்வு.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை