கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு திருக்கோயில் கூட்டமைப்பு நன்றி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam swami - 2026

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அதிபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தென்காசியை அடுத்துள்ள குற்றாலம் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் வைத்து தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில செயலாளர் மணிமகேஷ்வரன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ராமு முன்னிலைவகித்தார். மாவட்டத்தலைவர் பொன்னுத்துரை அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து விவேகானந்தா ஆசிரம சுவாமிகள் ஸ்ரீமத்அகிலானந்தமகராஜ் சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார்.

மண்டல அமைப்பாளர் சந்தனமாரியப்பன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.  தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறுவர், சிறுமிகளுக்கு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இந்து தர்ம சடங்குகள் பற்றிய சிறப்பு வகுப்புகள் நடத்துவது,

2.  கிராமங்களில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அனைத்து கோவில்களிலும் திருவிளக்கு வழிபாடு மற்றும் உழவாரப்பணிகள் மேற்கொள்வது,

3.  தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்புக்கு செங்கோட்டையில் சொந்தமாக கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது,

4.  இந்து தெய்வங்களையும் இந்து சமய வழிபாடு முறைகளையும் இழிவுபடுத்தி பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அதிபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், இணைச்செயலாளர் காசிசெட்டியார், துணைச்செயலாளர் பெத்ராஜ், துணைப்பொருளாளர் கோபக்குமார், ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்பாலகன், துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன், தங்கராஜ், மாவட்ட அமைப்பாளர் அய்யாசாமி, சக்திஐயப்பன், மக்கள் தொடர்பு நிர்வாகி நடராஜன், கேப்டன்சுவாமிநாதன், சிவக்குமார், சக்திவேல், பெயிண்டர்ஐயப்பன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் இராமையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இருந்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.