மதனப்பல்லி விவசாயி நாகேஸ்வர ராவின் இரு மகள்களுக்கும் கல்விக்கான அட்மிஷன் கடிதங்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
madanappalli girls in school admission - 2026

சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி என்டிஆர் டிரஸ்ட் இலவச ஹாஸ்டல் வசதியோடு கூடிய கல்விக்கான அட்மிஷன் கடிதத்தை விவசாயின் மகள்களுக்கு அனுப்பியுள்ளது. இனி இரு பெண்களும் என்டிஆர் டிரஸ்ட் கல்வி நிறுவன ஹாஸ்டலில் இருந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. தந்தை நாகேஸ்வரராவுக்கு இது குறித்து ட்ரஸ்ட் கடிதம் அனுப்பியுள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி விவசாய நாகேஸ்வரராவ் குடும்பத்திற்கு மேலும் ஒரு பரிசு கிடைத்துள்ளது. தெலுங்குதேசம் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு கொடுத்த வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். சந்திரபாபு நாகேஸ்வரராவின் மகள்களின் கல்வி பொறுப்பினை ஏற்றுக் கொள்வேன் என்று கூறிய விஷயம் தெரிந்ததே.

சந்திரபாபுவின் உத்தரவுப்படி என்டிஆர் டிரஸ்ட் இலவச ஹாஸ்டல் வசதியோடு கூடிய அட்மின்ஷன் கடிதத்தை அனுப்பியுள்ளது. இரு பெண்களும் இனி என்டிஆர் டிரஸ்டின் கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தந்தை நாகேஸ்வரராவுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஒருவேளை சொந்த ஊரிலேயே கல்லூரியில் படிக்க வேண்டுமென்று நினைத்தால் அதற்கு தேவையான பொருளாதார உதவியை என்டிஆர் மெமோரியல் டிரஸ்ட் மூலம் அளிப்போம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் மஹல் ராஜுபல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவுக்கு பொருளாதார வசதி இல்லாததால் பெண்களின் உதவியோடு நிலத்தை உழுத விஷயம் தெரிந்ததே. பிரபல நடிகர் சோனுசூட் அவருக்கு டிராக்டர் பரிசு அனுப்பி வைத்தார்.

சந்திரபாபு நாயுடு அவருடைய மகள்களின் படிப்பு பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார். கொடுத்த வாக்குப்படி நாகேஸ்வரராவின் பெண்களான வெண்ணிலா, சந்தனா இருவருக்கும் இலவச ஹாஸ்டல் வசதியோடு கூடிய அட்மிஷன் அளிப்பதாக கடிதம் அனுப்பி உள்ளனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.